Skygain News

பிரபல இசையமைப்பாளர் மரணம்..சோகத்தில் திரையுலகம்..!

மலையாள திரையுலகத்தில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்தவர் ஜான் பி வர்க்கி. தன் இசையால் ரசிகர்களை ஈர்த்த ஜான் உடல்நலக்குறைவால் காலமானது ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 52 வயதான ஜான் பி வர்கி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

மலையாளத்தில் வெளியான கம்மட்டிப்படம், நெய்துக்காரன், பெண்கொடி, உன்னம் போன்ற பிரபலமான படங்களுக்கு இசையமைத்தவர் ஜான். கேரளா மாநிலம், முல்லக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்த வர்கி, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காணமாக தனது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களிலும் வர்கி பணியாற்றியுள்ளார். மாட்ரிட் இமேஜின் இந்தியா திரைப்பட விழாவில் 2007 ஆம் ஆண்டு ஃப்ரோசன் என்ற நாடகத் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக வர்கி சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மலையாள திரையுலகின் மிக திறமையான இசையமைப்பாளரான வர்கியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வர்கிக்கு ஜாப் மற்றும் ஜோசப் ஜான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More