விளையாட்டு, சமூக சேவை ,பொழுதுபோக்கு , இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.
அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் . மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பதவியற்றுக்கொண்டனர் . ஆனால் அன்று இளையராஜா மட்டும் பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.