ஆந்திர மாநிலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் படத்தை வெளியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : “தமிழன் மானம் கப்பலில் ஏறி விட கூடாது என்பதற்காக கப்பல் ஒட்டியவர் வ. உ.சி… நாங்கள் தமிழ் தேசியம் பேசினால் இன்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அன்று தமிழ் நேசம் என்று பத்திரிக்கை நடத்தியவர் அவர். எழுவர் விடுதலை நீண்ட கால போராட்டம். இதற்கு நிறைய விலை கொடுத்து இருக்கிறோம்.மத்திய அரசு அதனை மீறி மீண்டும் மேல் முறையீடு செய்தால் நாங்கள் அதையும் எதிர்த்து போராடுவோம்.
முருகன் உள்ளிட்டோர் கடவு சீட்டு அளித்து அவர்கள் விரும்பிய நாட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த சிறையில் இருந்து விடுவித்து இன்னொரு சிறையில் அடைத்து விட்டார்கள். இது அதை விட கொடுமையான சிறை. அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசியதிற்கும் திராவிட அரசியலுக்கும் நடப்பது அண்ணன் தம்பி சண்டை. இதில் பாஜகவை உள்ளே விட முடியாது. தெலுங்கில் தமிழ் திரைப்படங்களை வெளியிட கூடாது என்று சொல்வது தவறு,தம்பி விஜய்யின் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.” எனக் கூறினார்.