தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதாக கூறி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டர் பலர் கைது செய்யப்பட்டனர் . காவல்துறையால் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் மக்கள் விரோத திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்த புதிய தமிழகம் கட்சியின்-நிறுவன தலைவர், டாக்டர் திரு கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களுக்கு ஆதரவு அளித்த யாதவ மகா சபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்- தலைவர், திரு தேவானந்தயாதவ் அவர்களுக்கு எனது நன்றிகள் பல… என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் மக்கள் விரோத திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்த புதிய தமிழகம் கட்சியின்-நிறுவன தலைவர், டாக்டர் திரு @DrKrishnasamy அவர்களுக்கு எனது நன்றிகள். https://t.co/PyfXLg3a9z
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 20, 2022