சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர்களுக்கான க உள்ளாட்சித் தேர்தல்கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது ,இதில் 16 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது, இதில் 13 வது வார்டில் பேரூராட்சி தலைவர் வேட்பாளாரான திமுக சார்பில் போட்டியிட்ட இளையான்குடி நகர செயலாளர் நஜ்முதீன்தோல்வி அடைந்தார்,இதனால் பேரூராட்சி தலைவராக 8,வது வார்டு திமுக கவுன்சிலர் செய்யது ஜமிமா தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார்
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த 13 வது வார்டில் கவுன்சிலர் மிர்சா உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் அடுத்து 13 வது வார்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது, இதில் பேரூர் சழகசெயலாளர் நக்மூதின் மறுபடியும் 13வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா. மற்றும் துணைத்தலைவர் சபுரியத் பீவி இருவரும் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டி காட்டி ஓரே நாளில் தங்கள் பதவியை இராஜினாமா செய்தார்கள், இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தலைவர் தேர்தல் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
இதில் போட்டியின்றி தற்போது இளையான்குடி பேரூராட்சி தலைவராக நஜூமுதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார், தேர்வு செய்யப்பட்ட நஜூதீனைமானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில்