தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. என்னதான் இவரை சுற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகின்றார். சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரது திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தங்களுடைய ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். இந்த ட்வின்ஸ் குழந்தைகளை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சட்டத்தின் விதிகளை மீறி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதாவது விதிமுறைகளின்படி, திருமணமாகி 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும்.
தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும். தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதல் கட்டாயம். ஒரு பெண் ஒரு முறை தான் வாடகைத்தாயாக இருக்க முடியும். நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். என இத்தனை விதிகள் உள்ளன.

இந்த விதிமுறைகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடைபிடித்தார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது