6 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை அண்மையில் திருமணம் முடித்தார் நயன்தாரா. இந்நிலையில் திருமணமான நான்கு மாதத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன் – விக்கி அறிவித்தனர். இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக கூறப்பட்டது.
இதற்காக இருவரும் முறையாக சட்ட முறையை பின்பற்றவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்தது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.
இந்நிலையில் இந்த விவகராம் தொடர்பாக தற்போது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதில் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்தம்பதியருக்கு பதிவு திருமணம் 11.03.2016இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் படியே இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டள்ளது. இதன்மூலம் விக்கி, நயன் வாடகை தாய் விவகார சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.