தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதையடுத்து திருமணமான 4 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் அறிவிப்பு வெளியிட்டார்.
சட்டப்படி திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து தான் வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெறலாம் என்று கூறி நயன்தாரா விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்கு பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாக சான்றிதழை அரசிடம் அளித்திருக்கிறார்கள்.எனவே இதன் மூலம் இப்பிரச்சனை முடிவிற்கு வந்தது.