கடந்த சில தினங்களாக தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றதுதான் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஏற்பட்ட இவர்களது காதல் கடந்த ஏழு வருடங்களாக வளர்ந்தது. அதன் பின் தங்கள் காதலை அடுத்தகத்திற்கு எடுத்து செல்ல நினைத்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் ஆன இவர்களுக்கு நான்கே மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இதைத்தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றது.
இந்நிலையில் நயன்தாரா-விக்கி எந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றனர் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது என்றும் அங்கு விசாரணை குழுவினர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

அந்த குழு முழு அறிக்கையை கொடுத்த பிறகு பத்ரிகையாளார்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.மேலும் தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் நேரடி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர்