தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.இந்நிலையில் திருமணமான நான்கு மாதத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன் – விக்கி அறிவித்தனர். இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக கூறப்பட்டது.
இதற்காக இருவரும் முறையாக சட்ட முறையை பின்பற்றவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்தது.இந்த சர்ச்சைகள் எல்லாம் தற்போது முடிவடைந்த நிலையில் நயன்தாரா தற்போது குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Alphonse Puthiran's #GOLD December 2nd Release In Theatres
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 15, 2022
Malayalam & Tamil pic.twitter.com/XS2ok3DXkf
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது