தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.தற்போது தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா கணவருடன் ஹனிமூன் சென்றார். தாய்லாந்து, ஸ்பெயின், துபாய் என வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர்.ஹனிமூனை முடித்துவிட்டு ஊர் திரும்பிய கையோடு தானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்.
வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். தானே குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு போய்விடும் என நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
Nayantara 🙁#Connect pic.twitter.com/a0N8vNcnKa
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 8, 2022
இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் கனெக்ட் படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். காரணம், நயன்தாரா கன்னம் கழுத்தெல்லாம் சுருங்கி, உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் உள்ளார்.இதனை பார்த்தநாயன்தாராவின் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்