தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது முதன்மையான காதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தொடர்ந்து நடிப்பில் ஆர்வமாக நடித்து வருகின்றார். இந்நிலையில் நயன்தாரா முதன்முதலாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார்.
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான் . ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி வில்லனாகவும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Ready! 🔥 #Jawan pic.twitter.com/uZxoEKWglr
— MAHA SRK FAN (@MahaanSRK) September 8, 2022
இதுமட்டுமின்றி தளபதி விஜய் காமியோ ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா சிறை கைதியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நயன்தாரா இதுவரை சிறை கதியாக நடித்ததில்லை என்பதால் இப்படத்தில் அவரது வித்யாசமான நடிப்பை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.