காந்தாராவின் 2ஆவது பாகம் குறித்த புதிய தகவலை இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த காந்தாரா திரைப்படத்தின் 2ஆவது பாகத்திற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2ஆவது பாகம் குலதெய்வம் பஞ்சுருளியை மையக்கருவாக கொண்டு உருவாகப்பட்டுள்ளதாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். காந்தரா படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வசூல் வேட்டையை குவித்தது குறிப்பிடத்தக்கது.
