லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 256 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

6.5 இன்ச் LCD 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர் 4 ஜிபி ரேம் 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 8MP பிரைமரி கேமரா 5MP செல்பி கேமரா யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி ஃபேஸ் அன்லாக் வசதி 4000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை CNY 499, இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 700 என துவங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை CNY 699, இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் மட்டும் நடைபெறுகிறது.