ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தில் நடித்த நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.இதைத்தொடர்ந்து தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாகவிருக்கும் கலகத்தலைவன் படத்தில் நடித்துள்ளார் நிதி.
இந்நிலையில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிக்கிறார்கள். லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வரும் அவர்களுக்கு விரைவில் திருமணம் என்றெல்லாம் பேச்சு கிளம்பி அடங்கியது.

இதைப்பற்றி பேசிய நிதி அகர்வால் ,என்னை பற்றி ஏதாவது சர்ச்சை எழுந்தால் என் அம்மா, அப்பாவை தவிர நான் வேறு யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. சர்ச்சைகள் எழுந்தால் முதலில் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. தற்போது பழகிவிட்டது. அதனால் சர்ச்சைகளால் பாதிப்பு இல்லை என்றார்.