ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நிக்கி கல்ராணி.தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நாயகியாக உருவெடுத்தார் நிக்கி கல்ராணி.இதைத்தொடர்ந்து மரகத நாயனம் படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து கடந்த மே மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பாரிஸுக்கு ஹனிமூன் சென்றிந்தார்கள்.அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து நிக்கி கல்ராணி – ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.