Skygain News

நிவா வீட்டை விட்டு வெளியே சென்றதும் அவரை தான் பார்க்கப்போறாங்களா ? கலாய்த்த போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் சீசன் 6 துவங்கி நாற்பது நாட்களாகிவிட்டது. சீசன் துவங்கிய வாரத்திலிருந்தே சண்டைகள் ,சர்ச்சைகள் என செல்வதால் ரசிகர்கள் ஆவலாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். முதலில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் இதுவரை ஜி.பி.முத்து, ஷாந்தி, அசல், ஷெரினா, மஹேஸ்வரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நிவாஸினி வெளியேறியுள்ளார்.

மொத்தம் ஏழு போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டதை அடுத்து கடைசியாக அசீம் மற்றும் நிவா குறைவான வாக்குகளை பெற்றனர்.இதில் மிக குறைவான வாக்குகளை பெற்று நிவா வெளியேறினார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவா கிளம்பும்போது அவரை மற்றவர்கள் கிண்டல் செய்தனர். ‘வெளியே போனதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும்’ என ஆயிஷா கிண்டல் செய்தார். அவர் அசல் கோளாறு பற்றி தான் சொல்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்தது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More