Skygain News

காலேஜ் ஹாஸ்டலா இல்ல ஜெய்லா எந்த வசதியும் இல்ல..!

கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பராமரிக்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இங்கு 23 மாணவர்கள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை என கூறியும் , இங்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் கூறி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், விடுதியில் தங்கி உள்ள 23 மாணவர்கள் கல்லூரி வாசல் முன் உள்ள கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் டிஎஸ்பி மாணவர்கள் மற்றும் வருவாய் துறையினருடன் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More