வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் விழுப்புரம் நகருக்குள் மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளான திரு.வி.க வீதி கண்ணகி வீதி நரசிங்கபுரம் அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் சரியாக நடைபெற்றிருக்கிறதா என மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நடந்து ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து மழைநீர் வடிகால் நீர் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு பணிகளை தீவிரபடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது நகராட்சி,பொதுப்பணித்துறை (நீர் வளம்), வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.