திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலை எப்போதும் ஆள் நடமாட்டம் மிகுந்த ஒரு பரபரப்பான பகுதி. ஆள் நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாத இப்பகுதியில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களும் உள்ளன இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தனியார் வங்கியின் ஏடிஎம் அறைக்கு வந்த சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒரிசா அஸ்வின் நாயக் (26) என்பவர் குடி பாதையில் ஏடிஎம் அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை சொருகிய அவர் ஏடிஎம் கார்டை திரும்ப எடுக்க முடியாமல் மது போதையில் திணறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து காடை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த வட மாநில இளைஞர் நேரம் அதிகரிக்கவே ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறம் உள்ள பாதுகாப்பு கவசத்தை கழட்டி ஏடிஎம் கார்டை எடுக்க முயற்சித்த போது அவருக்கு தோல்வி மட்டுமே எஞ்சியது. ஒரு கட்டத்தில் சோர்வடைந்த வட மாநில இளைஞர் அஸ்வின் நாயக் ஏடிஎம் அறையிலேயே விடிய விடிய தூங்கி உள்ளார். அதிகாலை அங்கு வந்த வங்கி காவலாளி காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் அஸ்வின் நாயக்கை கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.