Skygain News

இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ

ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். அதுபோல், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியாக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம்.

மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.