தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்காக ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்களை நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்தனர் . இந்த மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குகிறது .
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை 1 ல் பயிற்சிக்காக பணி அமர்த்தப்பட்டுள்ள ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்காமல் . பணிமனையில் உள்ள கழிவறைகளை கழுவச் சொல்வதும் , கழிவறை சுவற்றில் பெயிண்ட் அடிக்க சொல்வது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ள வேண்டி அதிகாரிகள் கட்டாயபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது .
இந்த நிலையில் தொழிற் பழகுநர் பயிற்சி மாணவர்களுக்கு முறையான தொழிற் பயிற்சிகளை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , பயிற்சி பழகுநர் மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அரசு போக்குவரத்து கழக மண்டல அளவில் உள்ள அரசு பணிமனைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.