சிவகங்கையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியவிளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சிவகங்கை மாவட்ட விளையாட்டு திடலில் பள்ளி மாணவர்களுக்கான 1600 மீட்டர் தடகளப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார். தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் பிரவின்குமார்,முன்னாள் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஜவகர் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்