சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நான்காம் திருநாளில் உற்சவர் விநாயகப் பெருமான் கமல வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக திருநாள் மண்டபத்தில் ஶ்ரீ கற்பக விநாயகர் வண்ணமலர் மாலைகள் அலங்காரத்தில் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளியினார் தொடர்ந்து கோபுர தீபம் நாக தீபங்கள் பூரண கும்ப தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஜெபித்து ஓதுவார்கள் 12 திருமுறை பாராயணம் மற்றும் திருவாசகம் பாடல்கள் பாடினர் இதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயக பெருமானை வழிபட்டனர்.
