வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர். பிரேம்ஜி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மாநாடு திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் உருவாக்க பயணத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை கொண்ட வீடியோவை வெளியிட்டனர்.
Thanks for everyone 🙏🙏❤️❤️#1YrOfMegaBBMaanaadu #Maanaadu #SilambarasanTR@SilambarasanTR_@vp_offl @thisisysr@iam_SJSuryah@kalyanipriyan @SAChandrasekher@vagaiyaar @VHouseProd_Offl @Premgiamaren @UmeshJKumar@Cinemainmygenes @Richardmnathan@silvastunt pic.twitter.com/ICNjVCHWGF
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2022
வீடியோவின் இறுதியில் “Loop continues soon” என்ற வாசகத்துடன் நிறைவு செய்தனர்.இதன் மூலம் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்