ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசின் சட்டமே தேவைப்படுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இவ்விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இடையில் கருத்தொற்றுமை அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்தார். பரந்து விரிந்த டிஜிட்டல் உலகில் மாநிலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சட்டம் இயற்றி கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது எனஅவர் தெரிவித்தார். பந்தயம் கட்டுதல், சூதாட்டம் போன்றவை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும் இவ்விவகாரத்தை பொறுத்தவரை மத்திய அரசு இயற்றும் பொதுவான சட்டமே பலன் தரும் என்றும் அமைச்சர் கூறினார்.
