Skygain News

புழல் ஏரியில் 100கனஅடி உபரிநீர் திறப்பு

புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் ஏற்கனேவே கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக நீர் நிரம்பி வந்தது.

இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரியில் 2717 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 18.54 அடியாக உள்ளது.

ஏரிக்கு வினாடிக்கு 539 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் புழல் ஏரி 82.33% நீர் இருப்பை நெருங்கியதால் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் பூஜைகளை செய்து ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து வெளியேற்றினர். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.