திருவிடைமருதூர் துவாரகாபுரியில் 27 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா இன்று திறக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவிடைமருதூர் ராமலிங்கம், கல்யாண சுந்தரம் , அரசு தலைமை கொறடா செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவிடைமருதூர் நகரில் மூன்று இடங்களில் பூங்காக்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. என்றும், மேலும் திருவிடைமருதூரில் பேருந்து நிலையம் அமைக்கவும் அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன் தலைமையில் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது .