Skygain News

ஓபிஎஸ், சசிகலா கூட்டணியா? பிப்.20ல் ஆலோசிக்கும் ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது.  இந்நிலையில் சென்னையில் பிப்ரவரி 20ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில் சசிகலாவுடன் சேர்வது, இ பி ஸ்-க்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறார் என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More