இந்தியா தற்போது நடைபெறும் T20 உலகக்கோப்பையில் வலுவான நிலையில் உள்ளது. இருப்பினும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாவே அணியை வீழ்த்தும் கட்டாயத்தில் இருக்கின்றது இந்தியா.அப்போது தான் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி மற்றும் 5வது போட்டியாக ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் நவம்பர் 6ம் தேதியன்று புகழ்பெற்ற மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதிலும் இந்தியா வெற்றி கண்டால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷேஹர் ஷின்வாரி போட்டுள்ள ட்வீட் இணையத்தை கலக்கி வருகிறது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
அதாவது ஜிம்பாப்வே அணி ஒருவேளை அதிசயம் தரும் வகையில் இந்தியாவை வீழ்த்திவிட்டால், ஜிம்பாப்வேவை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.