ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால் டாஸில் இருந்தது போன்ற அதிர்ஷ்டம் அந்த அணிக்கு பேட்டிங்கில் அமையாமல் போனது.நியூசிலாந்து அணியில் ஆபத்தான வீரராக பார்க்கப்பட்ட ஓப்பனர் ஃபின் ஆலன் 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓப்பனிங் வீரரான டெவோன் கான்வேவும் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதன்பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் பிலிஃப்ஸும் 6 ரன்களுக்கு வெளியேறியதால் அந்த அணி 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
எப்படியோ மிச்சலின் ஆபரமான் அரைசததால் நியூஸிலாந்து அணி 152 ரன்களை குவித்தது.இந்நிலையில் இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஓப்பனிங் வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டியதால் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்களை குவித்தனர்.சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 42 பந்துகளில் 53 ரன்களை விளாசினார்.

அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதன் பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 26 பந்துகளில் 30 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்து வெற்றி கண்டது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றது.