டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.இனி எஞ்சிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான அணி வெற்றி பெற்றாலும் கூட அடுத்த அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்குச் செல்ல முடியும்.
இந்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நான்காவது இடத்தில் வங்கதேசமும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானும் இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இந்திய அணி இந்திய அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.