நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் முடிந்தது. இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற நேற்று பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி வென்றே ஆகவேண்டும். அப்படி வென்றால் தான் இந்திய அணி இந்த ஆசிய தொடரில் நீடிக்கும். எனவே ஒட்டுமொத்தக இந்திய ரசிகர்களுக்கும் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஆனால் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்று இந்திய அணியை வெளியேற்றியது. இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் மோதல்களும் சண்டைகளும் வெடித்தன. 19 ஆவது ஓவரில் ஆசிஃப் அலி சிக்சர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தததும், ஆப்கான் பந்துவீச்சாளர் ஃபரித் கொண்டாடினார். இதனால் கடுப்பான ஆசிஃப் அலி, தன்னுடைய பேட்டை எடுத்து, ஃபரித்தை அடிக்க முயன்றார். இது ஆப்கான் ரசிகர்களை கோபம் அடைய செய்தது.
நேற்று போட்டியில் பாகிஸ்தான் வென்றதும், அந்நாட்டு வீரர்கள் எதோ பெரிய அணியை வீழ்த்தியதை போல் கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், கேலரியில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களை துரத்தி துரத்தி அடித்தனர். இருக்கைகளும் பறந்தன.
இதனால் மைதானத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இதை முதல் முறை செய்யவில்லை. அவர்கள் எப்போதும் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும். ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுகொள்ளுங்கள்.
அப்போது தான் விளையாட்டில் முன்னேற முடியும் என்று தெரிவித்துள்ளார். எனினும் சோயிப் அக்தரின் குற்றச்சாட்டு ஒரு தலைப்பட்சமானது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு நடந்துவரும் ஆசிய கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது
Shut up you sold-out yellow journo. The likes of you haven't even spared cricket to be a game. No 'Nawaz vs IK' happens here. Very sad to see a terrorist-like Asif Ali brandishing bat for fight. Pakistanis are the worse hate mongers ever. Players know how to celebrate. #PakvsAfg https://t.co/F5h0bBqre5
— Munawar.k Harifal (@Doodhpatti5) September 8, 2022