நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.ஒரே ஒரு போட்டியில் தான் சஞ்சு சாம்சன் விளையாடினார்.அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்காமல் கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கினார். இதனால் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும் என ட்விட்டரில் பிசிசிஐக்கு எதிராக ட்ரண்ட் செய்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ஷிகர் தவானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யாமல் அம்பத்தி ராயுடு போன்ற சிறந்த வீரரை பிசிசிஐ வீணடித்து இருக்கிறது.
இந்திய அணி நிர்வாகம் அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடியது. இதேபோன்று உன்ம்குந் சந்த் போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டை விட்டு விலகி வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்காவுக்கு சென்று விளையாடி வருகிறார். இதை போன்று பலவீரர்கள் வாய்ப்பை சரியான நேரத்தில் பெறாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த பட்டியலில் சஞ்சு சாம்சனும் இடம்பெற்றிருக்கிறார். சஞ்சு சம்சனுக்கு மட்டும் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பார். ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் அவர் பெஞ்சில் உட்கார்ந்து கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை தவான் கூறவில்லை. சஞ்சு சம்சன் ஏன் நீக்கப்பட்டார் என்று இந்திய அணி நிர்வாகமும் காரணம் சொல்லாதது வெட்கக்கேடானது என்று டேனிஷ் கனேரியா குறிப்பிட்டுள்ளார்.