Skygain News

71-வது பிறந்தநாள் காணும் கேப்டனுக்கு வாழ்த்து கூறிய பன்னிர்செல்வம் மற்றும் அன்புமணி ராமதாஸ்.!

நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்.

இந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது 71-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனது ஆருயிர் நண்பர், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! விஜயகாந்த் அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கட்பணியாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , “இன்று 70ஆவது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”. அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More