ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே. எஸ் தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவில் எடப்பாடி அணி இப்படி தீவிரமாக பணிகளை செய்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அப்படி ஒடுங்கி போய் இருக்கிறாராம்.

அண்ணன் அதிரடி அரசியல் செய்யாமல்.. அன்பாக டெல்லியின் ஆதரவை பெற முயன்றார். யாரையும் அவர் எதிர்க்கவில்லை. எடப்பாடியிடம் கூட என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் கூறினார். ஆனால் எல்லாம் அவருக்கு எதிராக சென்றுவிட்டது. அதனால் மன வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். அவர் இப்போது கடைசியாக நம்பி இருப்பது பொதுக்குழு வழக்கை மட்டுமே, என்று கூறுகின்றனர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்கள்.