மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்நிலையில் ற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தப் படத்தின் விமர்சனங்கள், வசூல் உள்ளிட்டவை படத்தை படத்தின் மிகச்சிறந்த வெற்றியை வெளிக்காட்டி வருகிறது.படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்றைய தினம் தெரிவித்துள்ளது. இந்தப் படம் இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தப் படம் மேலும் 100 கோடியை வசூலிக்க நடிகர் பார்த்திபன் தற்போது ஐடியா கொடுத்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம்மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Crosses-400
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம் என்றும் எழுப்பினால் இன்னும் ஒரு 100 கோடி படத்திற்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்திற்கு கிடைத்துவரும் நெகட்டிவ் கமெண்ட்களும் விளம்பரமாக மாறியுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.தற்போது இந்த ட்வீட் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது