ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை முதியோர் மற்றும் விதவை ஆகிய உதவித் தொகைகள்,புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு விட்டார்.
இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்..
