பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பல மாமேதைகளில் ஒருவர் தான் தந்தை பெரியார் . இன்று தமிழகம் முழுவதும் இவரின் 144 ஆவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சாதிய பாகுபாட்டினை கண்டு கொந்தெழுந்தது சமூக நீதி காத்திட தொடர்ந்து போராடியவர். ஆணும் , பெண்ணும் சரி சமம் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் தான் நம் பெரியார் .

சமூக நீதியை நிலை நாட்டுவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதை கொள்கைக்காகவே வாழ்ந்தவர்.
படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெற முடியும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெரியார் . சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
இந்நிலையில் பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.