2035 ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை தடுக்கும் விதமான சட்டத்திற்கு ஐரோப்பிய நாடளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு சதவீதத்தை பூஜ்ஜியமாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு பிற நாடுகளும் ஒத்துழைப்பு தந்து, பின்பற்ற வேண்டும் எனவும் ஐரோப்பியா கேட்டுக்கொண்டுள்ளது.
