மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 55 வயதான ஹரி சிங் நர்வாரியா. இவர் நேற்று தனது குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்து ரயில் பாதையில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தண்டவாளத்தின் நடுவில் தனது தந்தை நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அவரைக் காப்பாற்ற டிராக்கில் அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியுள்ளது.

இதில் உடல் துண்டான நிலையில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.