விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் கோவை குண்டுவெடிப்பு சம்பவம், கர்நாடகா மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு, டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய சம்பவங்களின் எதிரொலியாக மோப்ப நாய் ராணி உதவியுடன் நாச வேலை தடுப்பு போலீசார் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. ரயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தீடிரென போலீசார் சோதனை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது