Skygain News

நாங்குநேரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் மீட்டல்…! 3 பேர் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியத்தில் சிங்கநேரியை சேர்ந்த சங்கர் கணேஷ்(27), வேல் கண்ணன்(27) மற்றும் துரை என்கிற வீரதுரை (32) என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக குட்காவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More