மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகயுள்ள தகவலின்படி இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.