மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனரான மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.இரவு பகல் பாராமல் அனைவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள காரணத்தால் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக தயாரான இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் நடித்ததற்காக விக்ரம் 12 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

அதையடுத்து அதிகமாக ஐஸ்வர்யா ராய் 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.மேலும் ஜெயம் ரவி 8 கோடியும், கார்த்தி 5 கோடியும், திரிஷா 3 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.