மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது வருகின்றது.
பொன்னியின் செல்வன் படம் ரிலீஸான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. விடுமுறை நாட்களாக இருப்பதால் இந்த வாரமும் பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ரிலீஸான வேகத்தில் ரூ. 200 கோடி வசூல் செய்த மூன்றாவது தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 மற்றும் கபாலி ஆகிய படங்களை அடுத்து வேகமாக ரூ. 200 கோடி வசூல் செய்த படமாக இருக்கிறது பொன்னியின் செல்வன். இந்நிலையில் வரும் நாட்களில் இப்படம் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது