மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. பல வருடங்களாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி செய்த மணிரத்னம் ஒருவழியாக இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், சுமார் 125 கோடி ரூபாய்க்கு இந்தப்படத்தின் 2 பாகங்களையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கான உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப்படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையும் மிகப்பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலீசுக்கு முன்பே இந்தளவிற்கு ‘பொன்னியின் செல்வன்’ படம் கல்லா கட்டியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.