இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் கடந்த பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல வருட போராட்டத்திற்கு பிறகு அவரின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. தற்போது மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக உருவாக்கியுள்ளார்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.
மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நேற்றைய தினம் இந்தப்படத்தின் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி இருவரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். பிரம்மாண்டத்தின் உச்சமாக ‘பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் சாதனைகளை எல்லாம் இந்தப்படம் முறியடித்துவிடும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Unveiling the most awaited Tamil Trailer of #PS1 in the voice of @ikamalhaasan Sir!
— Lyca Productions (@LycaProductions) September 6, 2022
▶️ https://t.co/qj1NID9mOD
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #PS1AudioLaunch #PS1Trailer #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_