இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். அந்த முயற்சிக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
ஒட்டுமொத்த இந்தியர்களும் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.அதன்படி முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்த தகவல் படக்குழுவினருக்கு செம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.இந்நிலையில் அடுத்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது