Skygain News

குண்டும் குழியுமான சாலைகள்.. அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

நவ கிரகங்களில் ராகுகான பரிகாரத்தனமாக விளங்கும் நாகநாத சுவாமி ஆலயமும், 108 வைணவ திருத்தலங்களில் புகழ்பெற்ற ஒப்பிலியப்பன் திருக்கோவிலூர் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம்.

இந்நிலையில் இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது என்றும், சேதமுற்ற இந்த சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு தவமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விரைவில் இச்சாலைகளை சீரமைக்காவிடில் சாலை மறியல், சாலைகளில் வாழைமரம் நடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More